வடகொரியா மீண்டும் ஏவியது ஏவுகணை

NorthKoreaTest

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை, உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு மாலை 5 மணியளவில், ஏவியுள்ளது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு இரண்டு அணுமின் சக்தியில் இயங்கும் விமானம் தங்கி கப்பல்களை தென் கொரிய கடலுக்கு அனுப்பிய பின்னர் இந்த இரண்டு ஏவுகணைகளையும் ஏவி உள்ளது வடகொரியா.
.
இன்று ஏவிய கணை சுமார் 560 km உயரம் சென்று வீழ்ந்துள்ளது.
.
சுமார் ஒரு கிழமைக்கு முன் வடகொரியா ஏவிய ஏவுகணை சுமார் 2000 km உயரம் சென்றுள்ளது. வழமைபோல் கிடையாக அதிகூடிய தூரம் செல்ல ஏவும் கோணத்தில் (angle) ஏவாது, நிலைக்குத்துக்கு அண்மையான கோணத்தில் ஏவி, கணை செல்லும் தூரத்தை குறைத்துள்ளது வடகொரியா. இதே கணை முறையான கோணத்தில் செலுத்தப்படி, சுமார் 4,000 km செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த கணை புவியீர்ப்பு மண்டலத்துக்கு மேலே சென்று பின் குறி நோக்கி விழும்.
.

தற்போது மத்தியகிழக்கு, ஐரோப்பா பயணங்களை மேற்கொண்டுள்ள டிரம்ப் இன்றைய ஏவுகணை தொடர்பாக கருத்து எதையும் இதுவரை தெரிவித்து இருக்கவில்லை.
.