வடக்கு, தெற்கு கொரியா நேரடி பேச்சு

NorthKoreaTest

வடகொரியாவும் தென்கொரியாவும் இந்த மாதம் 9ஆம் திகதி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன. தென்கொரியாவின் இந்த விருப்பத்தை வடகொரியா ஏற்றுள்ளதாக தென்கொரியாவின் அமைச்சர் Baik Tae-hyun இன்று வெள்ளி தெரிவித்து உள்ளார்.
.
கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியா இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடாத்த விரும்புவதாக கூறி இருந்தது. அதற்கு முன்னர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தாம் தமது விளையாட்டு வீரர்களை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic போட்டிகளுக்கு அனுப்ப உள்ளதாக கூறி இருந்தார்.
.
2018 ஆம் ஆண்டு பிறப்பின் பின் வடகொரியா தெற்குடனான hotline தொடர்பையும் மீண்டும் ஆரம்பித்து உள்ளது. இந்த hotline இணைப்பும் 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதல் துண்டிக்கப்பட்டு இருந்தது.
.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின் வடக்கும், தெற்கும் நேரடியாக பேசுவது இதுவே முதல் தடவை.
.
அதேவேளை அமெரிக்காவும், தென்கொரியாவும் தாம் வருடாந்தம் நடாத்தும் இராணுவ பயிற்சியை Winter ஒலிம்பிக் காலத்தில் நிகழ்த்துவது இல்லை என்று கூறியுள்ளன.
.