வடக்கு வருகிறார் ரஜனி

Rajani

பொதுநல சேவை நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வடக்கு வருகிறார் இந்திய நடிகர் ரஜனிகாந்த். இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 9ம் திகதி இடம்பெறும்.
.
தனது பணத்தின் போது இவர் ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்குவர். Gnanam Foundation சுபாஷ்கரன் என்பவரின் Lyca Productions என்ற அமைப்பின் ஓர் அங்கமாகும். ஞானம் என்பவர் சுபாஷ்கரனின் தாயார் ஆவர். இந்த வீடுகள் வவுனியாவில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ளன.
.
ரஜனி அங்கு மரங்களும் நாட்டுவர். இந்த நிகழ்வில் இவருடன் வடமாகாண முதல்வர் உட்பட பல அரசியல் வாதிகளும் பங்கு கொள்வர். அத்துடன் பிரித்தானிய அரசியல்வாதிகள் சிலரும் கூடவே பங்கு கொள்வர்.
.
Lyca நிறுவனம் ராஜனியின் அடுத்த திரைப்படமான 2.0வில் முதலிட்டு உள்ளது. சங்கர் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு இந்திய 400 கோடி ரூபாய்கள் செலவிடப்படும்.

.