வட அத்திலாந்திக் கடல் மேல் மீண்டும் UFO?

BA94

கடந்த வெள்ளிக்கிழமை வட அத்திலாந்திக் கடலுக்கு மேலாக அடையாளம் காணப்படாத விண்கலம் (UFO) ஒன்று பறந்ததா என்று மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. அந்த வான்பரப்பில் அப்போது விமானங்களை செலுத்திய விமானிகள் சிலரின் செய்திகளே இந்த வியப்பை மீண்டும் தூண்டி உள்ளது.
.
கடந்த வெள்ளிக்கிழமை கனடாவின் மொன்றியால் (Montreal) நகரில் இருந்து லண்டன் சென்ற British Airways Flight BA94 இன் விமானி இடைவழியில் ஒரு பிரகாசமான ஒளியை கண்டுள்ளார். அவர் உடனே நில விமான தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு, அப்பகுதியில் ஏதாவது யுத்த விமான பயிற்சிகள் இடம்பெறுகிறதா என்று கேட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் அவ்வாறு பயிற்சிகள் எதுவும் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கவில்லை. மேலால் பறக்கும் விமானங்களை அவதானிக்கும் நில தொடர்பு, வானத்தில் வேறு விமானங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
.
தனது இடது பக்கத்தில் ஒரு பிரகாசமான ஓளி ஒன்று ஒலியிலும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்து, பின் வடக்கு நோக்கி சென்று மறைந்ததாக கூறியுள்ளார் Flight BA 94 விமானத்தின் விமானி.
.
பின்னர் அமெரிக்காவின் Orlando நகரில் இருந்து பிரித்தானியாவின் Manchester நகர் சென்ற Virgin Airlines Flight VS76 விமானியும் பிரகாசமான கலம் ஒன்று அவ்விடத்தில் பறப்பதை கண்டதாக கூறியுள்ளார்.
.

.