வறிய யெமென் மீனவர்க்கு கிடைத்த யோகம்

வறிய யெமென் மீனவர்க்கு கிடைத்த யோகம்

அண்மையில் யெமென் மீனவர் ஒருவர் ஏய்டென் குடாவுள் (Gulf of Aden) மரணித்த திமிங்கிலம் ஒன்று மீதப்பதாக ஏனைய மீனவர்க்கு கூறியுள்ளார். உடனே மொத்தம் 35 மீனவர் மரணித்த திமிங்கிலத்தை ஆராய சென்றனர். Sperm whale வகையான அந்த திமிங்கிலத்துள் அம்பர்கிரீஸ் (ambergris) என்ற பதார்த்தம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் திமிங்கிலத்தை கரைக்கு இழுத்து வெட்டினர். அப்போது அதில் சுமார் $1.5 மில்லியன் பெறுமதியான அம்பர்கிரீஸ் இருந்தது அறியப்பட்டது.

அந்த பணத்தை 35 மீனவரும் பகிர்ந்து, அவர்கள் பின் தமது உறவுகளுடன் பகிர்ந்து உள்ளனர். ஐ.நா. கணிப்பின்படி, யுத்தம் காரணமாக, சுமார் 80% மக்கள் அந்த நாட்டில் பட்டினிக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். அவர்களுக்கு இந்த யோகம் அளவற்ற மகிழ்ச்சியை வழங்கி உள்ளது.

Sperm whale வகை திமிலங்கள் மட்டுமே வழுவழுப்பான, wax போன்ற நிலையில் உள்ள அம்பர்கிரீசை உருவாக்கும். அதிலும் சுமார் 5% திமிங்கிலங்களே அவரை வயிற்றுள் கொண்டிருக்கும்.  அம்பர்கிரீஸ் ஆதி மருந்துகளுக்கு பயன்பட்டாலும் தற்போது வாசனைத்திரவிய (perfume) தயாரிப்புக்கும் பயன்படுகிறது. அதனால் இதற்கு பெரிய சந்தை உண்டு.

அம்பர்கிரீஸ் எடுப்பதற்காக திமிங்கிலங்களை கொலை செய்கிறார்கள் என்பதால் அஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற சில நாடுகள் அம்பர்கிரீஸ் வர்த்தகத்தை தடை செய்துள்ளன. ஆனால் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இப்பொருளுக்கு தடை இல்லை.