வலதுசாரிகள் கையில் ஐரோப்பா, பிரான்சில் தேர்தல்

வலதுசாரிகள் கையில் ஐரோப்பா, பிரான்சில் தேர்தல்

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரிகள் கை ஓங்கி உள்ளது. இம்முறை வென்ற கட்சிகள் பொதுவாக புதிய குடிவரவாளர் மீது வெறுப்பு கொண்டவை ஆகையால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய சட்டங்கள் குடிவரவாளருக்கு பாதகமானவையாக அமையலாம்.

பிரான்சில் தனது இடதுசாரி கட்சி தோல்வி அடைந்ததால் பிரான்சின் சனாதிபதி Macron உடனடியாக உள்நாட்டு National Assembly தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சில் Marine Le Pen னின் கட்சியான National Rally கட்சி 31% வாக்குகளை பெற்றுள்ளது. அது Macron னின் கட்சி பெற்ற வாக்குகளின் இரண்டு மடங்கிலும் அதிகம்.

ஜேர்மனியில் Social Democrats கட்சி (Olaf Scholz கட்சி) கட்சியான AfD யிடம் ஆளுமையை இழந்துள்ளது.

ஸ்பெயினில் People’s Party என்ற கட்சி Socialist Workers’ Party என்ற இடதுசாரி கட்சியை வென்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 360 மில்லியன் வாக்காளர் 720 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்றனர்.