விமானப்பணியாளரை அடித்த சிவசேனை அரசியல்வாதி

Gaikwad

இந்தியாவின் சிவசேனை (Shiv Sena) கட்சியை சார்ந்த, Maharashtra மக்களவை (Lok Sabha) உறுப்பினர் Ravindra Vishwanath என்பவர் Air India விமான பணியாளர் ஒருவரை வெள்ளியன்று அடித்து தாக்கியுள்ளார். நான் பணியாளரை 25 தடவைகள் தனது செருப்பால் அடித்தேன் என்று இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார். துணிவிருந்தால் டில்லி போலீசார் தன்னை கைது செய்யட்டும் பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
.
Pune நகரில் இருந்து டெல்லி சென்ற Air India விமானத்தில் இவர் Business Class ஆசனத்துக்கு சீட்டு வைத்திருந்தார். ஆனால் இவருக்கு சாதாரண ஆசனம் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அரசியல்வாதி 60 வயதுடைய தலைமை விமான பணியாளரிடம் வாக்குவாதப்பட்டார். அப்போதே அந்த அரசியல்வாதி பணியாளரை தாக்கினார்.
.
தாக்குதலுக்கு உள்ளன பணியாளர் “இதுதான் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கலாச்சாரமும், குணங்களும் என்றால் கடவுள் தான் எமது நாட்டை பாதுகாக்க வேண்டும்” என்றுள்ளார்.
.

அந்த அரசியல்வாதி மீதான Air India சேவை தடை காரணமாக அவர் வீடு திரும்பும் விமான சீட்டு இரத்து செய்யப்பட்டதால் அவர் IndiGo விமான சேவையை சீட்டு ஒன்றை பெற்றார். அதுவும் பின்னர் இரத்து செய்யப்பட, அவர் August Kranti Express என்ற ரயில் சேவையில் வெள்ளி மாலை Mumbai சென்றார்.
.