வியட்நாம் Saigon போல வீழ்ந்தது ஆப்கான் தலைநகர் காபூல்

வியட்நாம் Saigon போல வீழ்ந்தது ஆப்கான் தலைநகர் காபூல்

அமெரிக்கா எதிர்பார்த்ததிலும் வேகமாக ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் தலிபானின் கைகளில் வீழ்ந்து உள்ளது. காபூலின் வீழ்ச்சியை பலரும் 1975ம் ஆண்டு இடம்பெற்ற வியட்நாம் Saigon வீழ்ச்சிக்கு ஒப்பிடுகின்றனர். அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கு இது ஒரு படுதோல்வியாக அமைந்துள்ளது.

அமெரிக்க உளவு படைகள் ஆப்கானித்தான் நிலையை அறிய தவறி இருந்ததா அல்லது உளவு படைகள் வழங்கிய தரவுகளை விலக்கி பைடென் பின் யோசனை இன்றி அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு தலிபானின் மீட்சிக்கு அறியாமல் சந்தர்ப்பம் வழங்கி இருந்தாரா என்பது இதுவரை வெளிவரவில்லை.

வெளிநாட்டினரை மீட்க சென்ற இராணுவ விமானங்கள் பல தற்போது Azerbaijan, Uzbekistan ஆகிய நாடுகளுக்கு திசை திருப்பப்பட்டு உள்ளன. அவை காபூல் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

காபூலி விமான நிலையத்தில் இருந்து மேலெழும்ப முனைந்த பெரும் அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றையும் சுற்றி ஆப்கானித்தான் மக்கள் ஓடினர். ஆப்கானிஸ்தானை நீங்க முயல்வதே அவர்களின் நோக்கம். அவர்கள் தலைநகரின் விமான நிலையம் எங்கும் நிரம்பி உள்ளனர்.

முன்னாள் சனாதிபதி ரம்ப் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தீர்மானித்து இருந்தாலும், தற்போதைய சனாதிபதி பைடெனே திட்டமிடாது, தலிபான் நிலை அறியாது தீரென அமெரிக்க படைகளை பின்வாங்கி இருந்தார்.

அந்நிய படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு நீங்க முன்னரே அந்நாட்டு சனாதிபதி நாட்டை விட்டு தப்பி ஓடி இருந்தார்.