விரைவில் ஒரு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்?

விரைவில் ஒரு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்?

விரைவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்று நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த இணக்கத்தை கட்டார் அரசு முன் நின்று செய்கிறது.

இந்த உடன்படிக்கையின்படி  ஹமாஸ் தான் அக்டோபர் 7ம் திகதி கைப்பற்றி உள்ள பணய கைதிகளில் சிறுவர்களும், பெண்களும் அடங்க 50 பேரை விடுதலை செய்யக்கூடும். 

பதிலுக்கு இஸ்ரேல் 3 முதல் 5 தினங்களுக்கு காசா மீதான தாக்குதல்களையும் இஸ்ரேல் நிறுத்தும். அத்துடன் விடுதலை செய்யப்படும் ஒவ்வொரு இஸ்ரேலியர்க்கும் 3 பலஸ்தீனரை விடுதலை செய்யும். இந்த பலஸ்தீனர் நீண்ட காலமாக வழக்கு தாக்கல் எதுவும் இன்றி இஸ்ரேலின் சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள்.

மறுபுறம் al-Shifa வைத்தியசாலைக்கு கீழே உள்ள பதுங்கு குழிகள் (bunkers) இஸ்ரேலால் நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவை என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் Ehud Barak அமெரிக்காவின் CNN செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.