விவாகரத்தில் மாண்டுள்ள இந்திய செல்வந்த குடும்பம்

விவாகரத்தில் மாண்டுள்ள இந்திய செல்வந்த குடும்பம்

சுமார் $1.4 பில்லியன் வெகுமதியை கொண்ட Raymond Group என்ற நிறுவன குடும்பம் விவாகரத்தில் மாண்டுள்ளது. Gautam Singhania என்பவருக்கும் அவரின் மனைவி Nawaz Modi என்பவருக்கும்  இடையேயான விவாகரத்து சண்டையே தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது.

சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த Raymond Group நிறுவனத்தின் கடந்த தீபாவளி நிகழ்வுக்கு மனைவி Modi அனுமதிக்கப்படாதமை விவகாரத்து விசயம் உக்கிரம் அடைந்ததை காட்டியுள்ளது.

மனைவியுடன் அவர்களின் இரண்டு பெண் சிறுமிகளும் குடும்ப சொத்தின் 75% பங்கை கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கணவன் தன்னையும், பிள்ளைகளையும் அடித்து துன்புறுத்தியதாக மனைவி வழக்கு பதிவு செய்துள்ளார்.

கணவனின் தந்தையாரும் மனைவியின் பக்கம் உள்ளார். மகன் தன்னையும் 2017ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து துரத்தியதாக தந்தை கூறியுள்ளார்.