வீழ்ந்த F-35C விமானத்தை மீட்க அமெரிக்கா கடும் முயற்சி

வீழ்ந்த F-35C விமானத்தை மீட்க அமெரிக்கா கடும் முயற்சி

கடந்த திங்கள் கிழமை அமெரிக்காவின் USS Carl Vinson என்ற விமானம் தாங்கி கப்பலில் தரையிறக்கும் நேரத்தில் விபத்துக்கு உள்ளாகி கடலில் வீழ்ந்த F-35C வகை யுத்த விமானத்தை மீட்க அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்கா இதை மீட்க தவறின், சீனா இதை மீட்டு இதில் உள்ள உண்மைகளை, விஞ்ஞானங்களை, தொழில்நுட்பங்களை அறியக்கூடும்.

F-35C வகை யுத்த விமானங்களே அமெரிக்காவின் எதிர்கால யுத்த விமானம். இது பல நுட்பங்களை கொண்டது. இந்த நுட்பங்கள் பாதுகாக்கப்படாவிடின் சீனா, ரஷ்யா போன்ற எதிரிகள் இவற்றை அறியக்கூடும்.

உதாரணமாக இதன் மேற்பரப்பு paint ரேடார் கதிர்களை உறிஞ்சும் வல்லமை கொண்டது. அதனால் எதிரியின் ரேடார் கருவிகளை இந்த விமானம் ஏமாற்ற வல்லது.

விமானம் வீழ்ந்தது சீனாவை அண்டிய கடல் பகுதி என்பதால் நிலைமை சீனாவுக்கு நிலைமை சாதகமாக உள்ளது.

சீனாவிடம் 10 km ஆழம் சென்று பொருட்களை மீட்கக்கூடிய Haidou 1 என்ற நீர்மூழ்கி உண்டு.