வெப்ப கொடுமையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா

வெப்ப கொடுமையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எங்கும் தற்போது பரந்த அளவில் வெப்ப கொடுமை நிலவுகிறது.

அமெரிக்காவில் சுமார் 113 மில்லியன் அல்லது 1/3 பங்கு மக்கள் வெப்ப கொடுமையில் உள்ளனர். கலிபோர்னியா மாநிலம் முதல் புளோரிடா மாநிலம் வரையான தென் பகுதி பிரதானமாக வெப்பத்தால் பாதிக்கப்படுள்ளது.

அரிசோனா மாநிலத்து Phoenix  நகரில் சனிக்கிழமை வெப்பநிலை 43 C ஆக உள்ளது. கலிபோர்னியாவின் Death Valley பகுதியில் வெப்பநிலை 53 C ஆக உள்ளது. Las Vegas மாநிலத்து- Nevada பகுதில் வெப்பநிலை 47 C ஆக உள்ளது.

இத்தாலியில் ரோம், Florence உட்பட 16 நகரங்கள் வெப்ப கொடுமையில் உள்ளன. Sicily பகுதியில் வெப்பநிலை 48 C ஆகவுள்ளது. ரோமில் 44 C ஆகவுள்ளது.

ஜப்பானின் சில பகுதிகள் 39 C வரையான வெப்பநிலையை அடைந்துள்ளன.

அதேவேளை சில இடனங்களில் வெள்ள பெருக்கும் அழிவை உருவாக்கியுள்ளது.

டெல்லி பகுதியில் ஜமுனா நதி 208 மீட்டர் நீரை கொண்டுள்ளது. இது 1978ம் ஆண்டில் இருந்த நீரின் அளவிலும் அதிகம்.