வெளிநாட்டு பயணிகளை மீண்டும் அனுமதிக்கிறது இந்தியா

வெளிநாட்டு பயணிகளை மீண்டும் அனுமதிக்கிறது இந்தியா

கரோனா காரணமாக கடந்த 18 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு மூடி இருந்த இந்தியா மீண்டும் அவர்களை அனுமதிக்க உள்ளது என்று இன்று வியாழன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்களில் இந்தியா செல்வோரும், பின் நவம்பர் 15ம் திகதி முதல் பொது விமானங்களில் செல்லும் பயணிகளும் அனுமதிக்கப்படுவர்.

2018ம் ஆண்டில் இந்தியா உல்லாச பயணிகள் மூலம் $28.6 பில்லியன் வருமானத்தை பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. கரோனாவுக்கு முன், 2019ம் ஆண்டில் 10.6 மில்லியன் உல்லாச பயணிகள் இந்தியா சென்றுள்ளனர். அனால் கரோனா காரணமாக அது 2020ம் ஆண்டில் தடைப்பட்டது.

இந்தியாவில் இதுவரை சுமார் 34 மில்லியன் மக்கள் கரோனா தொற்றியும், சுமார் 450,000 பேர் பலியாகியும் உள்ளனர். அங்கு தற்போது 18.6% மக்கள் முற்றாக கரோனா தடுப்பு ஊசி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா தயாரித்த AstraZeneca தடுப்பு மருந்தையே பெற்று உள்ளனர்.

அமெரிக்காவின் Center for Disease Control வெளியிடும் கணிப்பில் இந்தியா Level 2: Moderate Risk நிலை ஆபத்தில் உள்ளது.