வெளியே தாக்கினாலும் உள்ளே தாக்கப்படும் IS

Syria

ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் வளர்ந்திருந்த IS என்ற இஸ்லாமியவாத ஆயுதக்குழு பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டாலும் தமது இடங்களில் பரிய தோல்விகளை தழுவி வருகிறது.
.
சிரியாவின் அசாத் தலைமையிலான அரச படைகள் இன்று Palmyra என்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரை மீண்டும் தம்வசமாக்கி உள்ளன. அத்துடன் Palmyra நகரில் இருந்து ஈராக் செல்லும் பெரும்தெருவையும் சிரியாவின் அரச படைகள் கைப்பற்றி உள்ளன. ஆரம்பத்தில் இந்த நகரில் சுமார் 70,000 மக்கள் இருந்திருந்தாலும் தற்போது சுமார் 15,000 மக்களே இங்கு உள்ளனர்.
.
இதற்கு முன் ரஷ்யாவின் யுத்த விமானங்கள் இங்கு 150 தாக்குதல்களை மேற்கொண்டு 320 IS உறுப்பினர்களை அழித்திருந்ததன.
.

அதேவேளை அமெரிக்காவின் தாக்குதலுக்கு IS குழுவின் நிதி அமைச்சரான Mustafa al-Qaduli இன்று பலியாகி உள்ளார்.
.