வேகமாக வெள்ளையரை இழக்கிறது அமெரிக்கா

வேகமாக வெள்ளையரை இழக்கிறது அமெரிக்கா

அமெரிக்காவிலும் வெள்ளையரின் சனத்தொகை வீதம் வேகமாக குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டுக்கான சனத்தொகை கணக்கெடுப்பின்படி (census) 2010ம் ஆண்டு அங்கு 63.0% ஆக இருந்த வெள்ளையரின் சனத்தொகை 2020ம் ஆண்டில் 57.3% ஆக குறைந்து உள்ளது. அதேவேளை அங்கு ஸ்பானியரினதும், ஆசியரினதும் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது.

கலப்பு திருமண குடும்பங்களின் தொகை சிறியது என்றாலும் அது அனைத்து வகையிலும் வேகமாக அதிகரித்து உள்ளது.

2010ம் ஆண்டில் 17.3% ஆக இருந்த ஸ்பானியர் தொகை 2020ம் ஆண்டில் 19.5% ஆக அதிகரித்து உள்ளது. தற்போது அங்கு ஸ்பானியர் தொகை 62.1 மில்லியன். காலிஃபோர்னியா மாநிலத்தில் ஸ்பானியர் தொகை 39.4% ஆக உள்ளது. அதனால் அவர்களே அந்த மாநிலத்தில் முதலாவது பெரிய சமூகம்.

அமெரிக்காவில் ஆசியர்களின் தொகை 24 மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அது 10 ஆண்டுகளில் இடம்பெற்ற 36% அதிகரிப்பு. தற்போது ஆசியரின் தொகை மொத்த சனத்தொகையின் 5.9%.

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் மொத்த சனத்தொகை 7.4% ஆல் அதிகரித்து, தற்போது 331.4 மில்லியன் ஆக உள்ளது. ஆனாலும் இந்த அதிகரிப்பு வேகம் 1930ம் ஆண்டுகளின் பின்னான காலத்தில் மிக குறைந்தது.