ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

SriDevi

இந்திய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை தனது 54வது வயதில் மரணமாகி உள்ளார். இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்கு Dubai சென்றிருந்தபோதே மரணமாகி உள்ளார்.
.
1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவகாசியில் தமிழ் தந்தையாருக்கும், தெலுங்கு தாயாருக்கும் பிறந்த இவர் ‘துணைவன்’ படம் (1969) மூலம் தனது நடிப்பு தொழிலை ஆரம்பித்து இருந்தார்.
.
இவர் முதன்மை பாத்திரமாக நடித்த திரைப்படம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ என்ற 1976 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமே. பின்னர் ‘மீண்டும் கோகிலா’, ’16 வயதினிலே’ போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிரசித்தம் ஆனார்.
.
முன்னர் Mithun Chakraborty என்பவரை திருமணம் செய்த இவர், விவாகரத்தின் பின் Boney Kapoor என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்திருந்தார். Boney Kapoor, அனில் கபூர், சன்ஜெய் கபூர் ஆகியோரின் சகோதரர் ஆவார்.
.
ஸ்ரீதேவிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.
.