ஹரி குடும்பம் அரச குடும்பத்துக்கு வெளியே

Harry

ஹரியும் (Price Harry), இராணியும் கொண்டுள்ள இணக்கப்படி ஹரியின் அனைத்து அரச சலுகைகளும் பறிக்கப்பட உள்ளன. அமெரிக்க பெண்ணான மேகன் (Meghan) என்பவரை திருமணம் செய்த டயானாவின் இளைய மகன் ஹரி அண்மையில் அரை தனிக்குடித்தனம் செல்ல முனைந்தார். ஆனால் இராணி ஹரியை முற்றாக அரச குடும்பத்தில் இருந்து வெளியேற்ற உள்ளார். இந்த அறிக்கை இன்று சனிக்கிழமை Buckingham Palace தரப்பால் வெளியிடப்பட்டு உள்ளது.
.
மேற்படி இணக்கப்படி ஹரி குடும்பம் வடஅமெரிக்காவில் சுதந்திரமான வாழக்கையை நடாத்தும். சிலவேளைகளில் இவர்கள் கனடாவை பிரதான குடியிருப்பு நாடாக கொண்டிருப்பர். அத்துடன் இவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் ஆற்றுவர். Meghan மீண்டும் Hollywood பக்கம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
.
பதிலா ஹரி ஏறக்குறைய அனைத்து அரச சலுகைகளையும் இழப்பர். இவர்களுக்கு செலவழிக்கப்பட்ட $3 மில்லியன் தொகையை ஹரி அரச குடும்பத்துக்கு திருப்பி வழங்கும். அத்துடன் ஹரி “His Royal Highness” என்ற பட்டத்தையும், Meghan “Her Royal Highness” என்ற பட்டத்தையும் பயன்படுத்த முடியாது.
.
1936 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் King Edward VIII அமெரிக்க பெண்ணான, முதல் இருதடவை திருமணம் செய்திருந்த, Wallis Simpson என்பவரை திருமணம் செய்யும் நோக்கில் அரச பதவியை கைவிட்டு இருந்தார்.
.
பிரித்தானியா ஹரி குடும்பத்துக்காக பாதுகாப்பு செலவை வழங்காத நிலையில் கனடா இவர்களின் பாதுகாப்பு செலவை பொறுப்பு எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரச குடும்பத்துக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்ய கனடா பின்னாடிக்கலாம். இவர்கள் அமெரிக்காவில் பணிபுரிதால், அமெரிக்காவிலேயே வரியையும் செலுத்துவர்.
.