ஹாங் காங்கில் 140 ஆண்டுகளின் பின் அதிக மழை

ஹாங் காங்கில் 140 ஆண்டுகளின் பின் அதிக மழை

ஹாங் காங் நகரில் வியாழன் முதல் பெரும் மழை பொழிகிறது. இந்த மழை கடந்த 140 ஆண்டுகளில் பெரிய மழை வீழ்ச்சி ஆகும். மழை வீழ்ச்சி சனிக்கிழமை வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கு வியாழன் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 வரையில் மட்டும் 200 mm மழை பெய்துள்ளது. இது சுமார் ஒரு மாதத்து மழை வீழ்ச்சிக்கு சமனாகும்.

இந்த பெருமழை ஏற்படுத்திய வெள்ளம் காரணமாக வீதிகள் பல ஆறுகள் ஆகியுள்ளன. நிலக்கீழ் ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள் ஆகியன வெள்ளத்துள் மூழ்கி உள்ளன. மலை சரிவுகளை அண்டிய இடங்களில் மட்சரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதனால் பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஹாங் காங் மட்டுமன்றி அதை அண்டிய சீன நகரங்களும் பெரும் மழை வீழ்ச்சியை பெற்றுள்ளன.