​தாய்வான் அடுக்குமாடி தீக்கு 46 பேர் பலி

​தாய்வான் அடுக்குமாடி தீக்கு 46 பேர் பலி

Kaohsiung என்ற தெற்கு தாய்வான் நகரில் இன்று வியாழன் ஏற்பட்ட அடுக்குமாடி தீக்கு குறைந்தது 46 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 41 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

மொத்தம் 13 அடுக்குகளை கொண்ட இந்த மாடியின் தீ தற்போது கட்டுப்பாட்டுள் உள்ளது. ஏழாம் மாடி முதல் 11ம் மாடி வரையில் உள்ள வீடுகளில் தொடர்ந்தும் தேடுதல் செய்யப்படுகிறது என்று தீயணைப்பு கூறியுள்ளது.

இந்த மாடி சுமார் 40 ஆண்டுகள் பழமையானது. தெருவோரம் உள்ள இந்த மாடியின் நிலமட்டம் கடைகளையும், மேல் மாடிகள் குடியிருப்பு வீடுகளையும் கொண்டது.

இந்த மாடியில் குடியிருந்தோரில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Kaohsiung நகரம் தாய்வானின் மூன்றாவது பெரிய நகரம். இங்கு சுமார் 2.77 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.