பிரதான செல்வந்த நாடுகளின் அரசுகள் பெறும் கடன்களுக்கான வட்டிகள் (bond yield) தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றன. இதனால் இந்த நாடுகளில் வீடு, கார் போன்றவற்றை கொள்வனவு செய்ய நுகர்வோர் பெறும் கடன்களுக்கு செலுத்தவுள்ள வட்டியும் அதிகரிக்கிறது.
Bond கடன் வட்டி அதிகரிக்க அரசுகள் தமது வரி வருமானத்தின் பெரும்பகுதியை bond கடன்களுக்கான வட்டியாக செலுத்தும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு பெரிய பொருளாதார நாடுகள் தாம் பெற்ற வரி வருமானத்தின் $3.3 டிரில்லியன் பணத்தை வட்டியாக செலுத்தி உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த நாடுகள் தமது பாதுகாப்புக்கு செலவழித்து $3.1 டிரில்லியன் மட்டுமே.
அமெரிக்க அரசு பெறும் 10-ஆண்டு bond கடனுக்கான வட்டி (yield) வியாழன் 5.34% ஆக அதிகரித்து உள்ளது. 2002ம் ஆண்டுக்கு பின் இதுவே அதிகூடிய வட்டியாகும். அங்கு 30-ஆண்டு வட்டியும் 5.69% ஆகியுள்ளது. அமெரிக்காவில் வீட்டு கடன் போன்ற 30-ஆண்டு கடன்களுக்கான வட்டி 7% ஆகியுள்ளது.
பிரித்தானியாவின் நீண்ட கால நுகர்வோர் கடன் வட்டி 1998ம் ஆண்டுக்கு பின் அதி உயர் அளவில் உள்ளது. வீட்டு கடன் போன்ற 30-ஆண்டு கடனுக்கான வட்டி 6% அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிரான்சின் 10-ஆண்டு bond வட்டி 5% ஆகவும், 30-ஆண்டு வட்டி 5.55% ஆகவும் அதிகரித்து உள்ளன.
ஜேர்மனியின் 10-ஆண்டு bond வட்டி 3.52% ஆகவும், 30-ஆண்டு வட்டி 3.90% ஆகவும் உள்ளன.
ஜப்பானில் 10-ஆண்டு bond வட்டி 3.10% ஆகவும், 30-ஆண்டு வட்டி 4.18% ஆகவும் அதிகரித்து உள்ளன.
