அத்திரம்பாக்கத்தில் 385,000 வருட ஆயுதங்கள்

RockTools

நேற்று புதன்கிழமை Nature என்ற சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றின்படி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 km தூரத்தில் உள்ள அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட ஆதி மனிதனின் கல் ஆயுதங்கள் 385,000 வருடங்கள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
.
இதுவரை காலமும் விஞ்ஞானம் இந்திய மனிதம் தொடர்பாக கொண்டிருந்த எண்ணக்கருவை நேற்று வெளியிட்ட கருத்து பொய்யாக்கி உள்ளது. முன்னர் கொண்டிருந்த கணிப்பிலும் 250,000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆதி மனிதர் ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் என்று இப்போது கருதப்படுகிறது.
.
ஆனால் இதுவரை மனித அல்லது ஆதிமனித (hominins ) உடல்கள் அல்லது எச்சங்கள் இந்தியாவில் கண்டு பிடிக்கப்படாதது விஞ்ஞானத்தை மேலும் குழம்ப வைத்துள்ளது. பதிலாக மொராக்கோவில் (Morocco) 300,000 வருட பழமைவாய்ந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

தற்போதைய விஞ்ஞானத்தின் கருத்துப்படி மனிதம் அல்லது ஆதி மனிதம் ஆபிரிக்காவில் தோன்றி, பின் உலகின் மற்றைய பாகங்களுக்கு நகர்ந்துள்ளது.
.

அத்திரம்பாக்கம் எச்சங்கள் முதலில் பிரித்தானிய ஆய்வாளர் Robert Bruce Foote என்பவரால் 1863 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சுமார் 7,000 கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
.