இந்திய மத்திய அரசின் CBI (Central Bureau of Investigation) அனில் அம்பானி மீதும், அவரின் முறிந்துபோன Reliance Communication நிறுவனத்தின் மீதும் 2,000 கோடி இந்திய ரூபாய் ($344 மில்லியன்) ஊழல் வழக்கு விசாரணை ஒன்றை ஆரம்பித்து உள்ளதாக கூறியுள்ளது.
State Bank of India (SBI) இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு படியாக இன்று சனிக்கிழமை அனில் அம்பானி வீட்டிலும், அவரின் அலுவலகங்களிலும் CBI தேடுதல் செய்துள்ளது.
அனில் அம்பானி இந்தியாவின் முதல் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர்.