அமெரிக்காவில் அர்த்தமற்ற பங்குச்சந்தை சூதாட்டம்?

அமெரிக்காவில் அர்த்தமற்ற பங்குச்சந்தை சூதாட்டம்?

அமெரிக்காவில் சில நிறுவனங்களின் பங்குச்சந்தை பங்குகளை அர்த்தமற்ற வகையில், சூதாட்டத்துக்கு நிகரான முறையில், பெருமளவு  முதலீட்டாளர் கொள்வனவு செய்கின்றனர். இதனால் நட்டத்தில் இயங்கும் சில நிறுவங்களின் பங்கு விலைகள் ஒரு கிழமைக்குள் மட்டும் 300% மடங்கால் அதிகரித்து உள்ளன.

GameStop என்ற வீடியோ game விற்பனை செய்யும் நிலையங்களை கொண்ட நிறுவனம் 2019ம் ஆண்டு $470 மில்லியன் நட்டத்தை அடைந்திருந்தது. இது அதற்கு முன் 2017ம் ஆண்டு தனது கடைகளில் 150 கடைகளை இலாபம் இன்மையால் மூடியும் இருந்தது. அதனால் இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை $2.57 (GME, NASDAQ) ஆக குறைந்து இருந்தது.

ஆனால் எந்தவித காரணமும் இன்றி அந்த பங்கு ஒன்றின் விலை தற்போது $380.00 வரை அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 2 கிழமைகளுள் நிகழ்ந்துள்ளது. GameStop நிறுவன அதிகாரிகளுக்கே பங்கு விலை அதிகரிப்பதற்கான காரணம் தெரியாது.

BlackBerry என்ற கனடிய நிறுவனத்தின் பங்கு விலையும் அவ்வாறே கடந்த 2 கிழமைகளுள் அதிகரித்து உள்ளது. ஒரு வருடத்துள் $3.94 ஆக இருந்த இதன் பங்கு ஒன்றின் விலை $36.00 ஆக உயர்ந்து உள்ளது.

Express Inc (EXPR) நிறுவனத்தின் பங்கும் அடர்த்தமற்ற விலையில் அதிகரித்து உள்ளது. ஒருவருடத்துள் $0.57 வரை கீழே சென்ற இதன் பங்கு விலை தற்போது $13.97 வரை உயர்ந்துள்ளது.

அமெரிக்க பங்கு சந்தை சுட்டிகளான DOW சுமார் 650 புள்ளிகளாலும், NASDAQ சுமார் 360 புள்ளிகளாலும் வீழ்ச்சி அடையும் காலத்திலேயே மேற்படி பங்குகளின் விலைகள் அர்த்தமற்ற முறையில் அதிகரிக்கின்றன.

அமெரிக்காவின் அரச திணைக்களமான Security and Exchange Commission அதிகாரிகள் short squeeze அல்லது short selling என்று அழைக்கப்படும் இந்த பங்கு சந்தை சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியாது முழிக்கின்றனர்.

இந்த பங்குகளை கொள்வனவு செய்வோருள் பலர் பாரிய நட்டத்தை அடைவர் என்றும், அது எப்போது இடம்பெறும் என்று தெரியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.