அமெரிக்காவில் இருந்து 64 ஆய்வாளரை கவர்ந்த கனடா 

அமெரிக்காவில் இருந்து 64 ஆய்வாளரை கவர்ந்த கனடா 

அமெரிக்காவில் இருந்து 64 பல்கலைக்கழக ஆய்வாளரை கனடா பெரும் செலவில் தன் பக்கம் கவர்ந்து இழுத்துள்ளது.

அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது கடும் போக்கை திணிக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே கனடா மேற்படி ஆய்வாளரை கவர்ந்துள்ளது.

இந்த முயற்சிக்கு கனடா அடுத்த 8 ஆண்டுகளுக்கு C$ 500 மில்லியன் வரிப்பணத்தை செலவழிக்கும்.

இந்த ஆய்வாளர் சிலர் Harvard, Cornell, MIT போன்ற முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இருந்து கனடா வருகிறார்கள்.

இவர்களில் 9 பேர் கனடாவின் University of British Columbia வுக்கும், 6 பேர் University of Toronto வுக்கும் செல்கிறார்கள்.