அமெரிக்காவில் கரோனா தடுப்பு ஊசிக்கு $1 மில்லியன் பரிசு

அமெரிக்காவில் கரோனா தடுப்பு ஊசிக்கு $1 மில்லியன் பரிசு

அமெரிக்காவின் ஓகாயோ (Ohio) மாநில ஆளுநர் Mike DeWine, அடுத்து வரும் 5 கிழமைகளுக்கு, ஒவ்வொரு கிழமையும் அங்கு தடுப்பு ஊசி போடும் ஒரு அதிஷ்டாசாலிக்கு $1 மில்லியன் வழங்க முன்வந்துள்ளார். முதலாவது அதிஷ்டாசாலியின் பெயர் மே 26ம் திகதி அறிவிக்கப்படும்.

அது மட்டுமன்றி தடுப்பு ஊசி பெறும் இளையோருக்கும் அம்மாநிலத்தில் குலுக்கல் மூலம் 4 ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக புலமைப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. பல்கலைக்கழக கட்டுமானம், குடியிருப்பு செலவு, புத்தக செலவு அனைத்தும் அப்பரிசில் வழங்கப்படும்.

அமெரிக்காவின் மத்திய அரசு கரோனா தடுப்புக்காக மாநிலத்துக்கு வழங்கிய பணத்தில் இருந்தே குலுக்கலுக்கான பணம் பெறப்படும்.

அமெரிக்கா ஏற்கனவே சுமார் 58.7% மக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி வழங்கி உள்ளது. அனால் சனாதிபதி பைடென் வரும் ஜூலை 4ம் திகதிக்கு முன் 70% மக்களுக்கு தடுப்பு ஊசி வழங்க முனைகிறார்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பலமான நாடுகள் தமது தேவைக்கும் அதிகமான தடுப்பு ஊசிகளை கைக்கொண்டு உள்ளன. அதேவேளை உலகின் பல பாகங்கள் கரோனா தடுப்பு மருந்து கிடையாது தவிக்கின்றன.