அமெரிக்காவில் மூன்றாவது மரண காரணி வைத்தியசாலை தவறுகள்

USDeath

அமெரிக்காவின் Johns Hopkins Medicine நிலைய ஆய்வார்கள் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மரண காரணி வைத்தியசாலைகளில் இடம்பெறும் தவறுகள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. தவறான மருந்துகளை கொடுத்தல், தவறான உறுப்புக்களை அறுவை செய்தல், தொற்று நோய்கள் பரவலை முறையாக கட்டுப்படுத்தாமை என பல காரணங்கள் இவ்வகை மரணங்களை தோற்றுவிக்கின்றன.
.
அமெரிக்காவில் வருடம் ஒன்றில் சுமார் 251,000 பேர் வைத்தியசாலை தவறுகள் காரணமாக மரணிக்கின்றனர். அதாவது நாள் ஒன்றில் சுமார் 700 அமெரிக்கர் வைத்தியசாலை தவறுகள் காரணமாக மரணிக்கின்றனர். அதேவேளை முதல் மரண காரணியான இருதய நோய்க்கு சுமார் 614,000 பேரும், இரண்டாம் மரண காரணியான புற்று நோய்க்கு சுமார் 591,000 பேரும் பலியாகின்றனர்.
.

2010 ஆம் ஆண்டில் Department of Health and Human Servicesஇன் அறிக்கை ஒன்று வைத்தியசாலை தவறுகளால் மரணிப்போர் எண்ணிக்கை வருடம் ஒன்றுக்கு 180,000 என்றிருந்தது.
.