அமெரிக்காவில் 18 மாணவர் துப்பாக்கி சூட்டுக்கு பலி

அமெரிக்காவில் 18 மாணவர் துப்பாக்கி சூட்டுக்கு பலி

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Uvalde என்ற இடத்து Robb Elementary School மாணவர் 18 பேர் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளனர். உள்ளூர் நேரப்படி இந்த சூடு மதியம் 12:17 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரும், வயது 18, அதிகாரிகளின் சூட்டுக்கு பலியாகி உள்ளார்.

கவச உடைகள் அணிந்த சந்தேகநபர் முதலில் தனது பேத்தியை (grandmother) சுட்டுள்ளார். பேத்தி ஹெலி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

சந்தேகநபர் பின்னர் தான் பயணித்த pick-up வாகனத்தை மோதியுள்ளார். விபத்துக்கு உள்ளான வாகனத்தை கைவிட்டு, சந்தேகநபர் பெரிய துப்பாக்கிகளுடன் பாடசாலை சென்றுள்ளார். அங்கு அதிகாரிகள் சந்தேகநபரை தடுக்க முனைந்தாலும், அவர் வகுப்பு அறைகளுக்குள் நுழைந்து மாணவர்களை சுட்டு உள்ளார். குறைந்தது 18 மாணவர் பலியாகி உள்ளனர்.

2018ம் ஆண்டு Parkland என்ற Florida மாநிலத்து நகரில் பாடசாலை ஒன்றில் 17 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

2012ம் ஆண்டு அமெரிக்காவின் Sandy Cook என்ற இடத்து பாடசாலையில் 20 சிறுவர்களும், ஆசியர்கள், அதிகாரிகள்உட்பட 6 பேரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருந்தனர்.