அமெரிக்காவை தாக்கும் கடும் குளிர் காலநிலை

அமெரிக்காவை தாக்கும் கடும் குளிர் காலநிலை

அமெரிக்காவின் 29 மாநிலங்களில் உள்ள சுமார் 65 மில்லியன் மக்கள் அங்கு நிலவும் கடும் குளிர் காலநிலையில் அகப்பட்டுள்ளனர். இந்த கடுங்குளிர் மேற்கே கலிபோர்னியா மாநிலம் முதல் கிழக்கே நியூ யார்க் வரை தாக்கவுள்ளது. இதன் எச்சங்கள் Toronto, Ottawa போன்ற கனடாவின் கிழக்கு பகுதிகளையும் தாக்கும்.

Minneapolis பகுதி புதன்கிழமை மட்டும் சுமார் 20 அங்குல (51 cm) snow வை பெறும் என்றும் மொத்தத்தில் 24 அங்குல snow வை பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இதுவே மிக அதிகம்.

பெருமளவு Snow வீழ்ச்சி அடைவது மட்டுமன்றி 80 km/h வரையான காற்று காரணமாக அந்த snow நிலத்தில் படியாது எப்போதும் சூறாவளி போல் சுழன்று blizzard நிலை தோன்றும். இதனால் சில அடி தூரத்துக்கு அப்பால் கண்ணால் எதையும் காண முடியாத நிலை தோன்றும். Highway வாகன பயணங்கள், விமான போக்குவரத்துக்கு ஆகியன கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே 700 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஐம்பெரும் வாவிகளை அண்டிய பகுதிகள் உறைபனி (icing) வீழ்ச்சியாலும் பாதிப்பு அடையும். Michigan மாநிலத்தில் உள்ள Detroit மற்றும் Ann Arbor ஆகிய நகரங்கள் அதிக அளவு உறைபனியை பெறும்.

கனடாவின் Toronto பகுதி 10 முதல் 15 cm snow வை பெறும் என்று கூறுகிறது கனடிய வானியல் சேவை. இங்கு உறைபனி வீழ்ச்சி குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.