சனிக்கிழமை காலை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க, ஈரானும் திருப்பி தாக்குகிறது. இதனால் மத்திய கிழக்கினூடான விமான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் படைகளை மட்டுமன்றி கொமெய்னி போன்ற ஈரானின் தலைமைகளையும் குறிவைத்துள்ளது. ஆனால் அழிவு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.
ஈரான் பதிலுக்கு டுபாய், அபுதாபி போன்ற UAE நகரங்கள், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய இடங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளை நோக்கியும், இஸ்ரேலை நோக்கியும் ஏவுகணை தாக்குதல்களை செய்கிறது.
இரண்டு தரப்புக்கும் இது இறுதி யுத்தமாகலாம், இன்னோர் யுத்தத்துக்கு எதுவும் மிச்சம் இருக்காத நிலை தோன்றலாம்.
