அமெரிக்கா, ஈரான் மறுதரப்பு மீது தாக்குதல், யுத்த நிறுத்தம் முறிந்தது?

அமெரிக்கா, ஈரான் மறுதரப்பு மீது தாக்குதல், யுத்த நிறுத்தம் முறிந்தது?

இன்று திங்கள் அமெரிக்க படைகளும், ஈரான் படைகளும் மறுதரப்பு மீது கடுமையான தாக்குதல்களை செய்துள்ளன. ஈரான் UAE துறைமுகம் மீதும் தாக்கியதாக UAE கூறியுள்ளது.

அமெரிக்க யுத்த கப்பல்கள் யுத்த நிறுத்த நிபந்தனையை மீறி ஹோர்முஸ் பகுதிக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே அவற்றின் மீது ஈரான் தாக்குதலை செய்துள்ளது.

பதிலுக்கு அமெரிக்கா ஈரானின் சில சிறிய இராணுவ படகுகளை தாக்கியுள்ளது.

யுத்த நிறுத்தம் முறிந்ததா அல்லது தொடர்கிறதா என்பதை தன்னால் கூற முடியாது என்று அங்கு அமெரிக்க படைகளை வழிநடத்தும் அட்மிரல் Bradley Cooper கூறியுள்ளார்.