அமெரிக்க அரச கடன் $40 டிரில்லியன் ஆகியது

அமெரிக்க அரச கடன் $40 டிரில்லியன் ஆகியது

அமெரிக்க மத்திய அரசின் கடன் தொகை $40 டிரில்லியன் ($40,000 பில்லியன்) ஆகியது என்று செவ்வாய் அமெரிக்க இறைவரி திணைக்களம் (Treasury Department) கூறியுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கடன் $20 டிரில்லியன் ஆக மட்டுமே இருந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் இக்கடன் தொகை $50 டிரில்லியன் ஆகலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

2023ம் ஆண்டு அமெரிக்க Congressional Budget Office வெளியிட்ட கணிப்பின்படி 2028ம் ஆண்டே கடன் தொகை $40 டிரில்லியன் ஆகியிருக்க வேண்டும். அனால் அது 2 ஆண்டுகள் முன்னாக நிகழ்ந்துள்ளது.

2026ம் பொருளாதார ஆண்டுக்கான முதல் 10 மாதங்களில் மட்டும் அமெரிக்க அரசு $4.49 டிரில்லியன் வருமானத்தையும், $6.28 டிரில்லியன் செலவையும் கொண்டுள்ளது.

முதல் 10 மாதங்களில் அமெரிக்க அரசின் வருமானங்கள்:

1) பொதுமக்கள் வருமான வரி: $2.37 டிரில்லியன் 
2) Payroll, Social Insurance வரிகள்: $1.52 டிரில்லியன் 
3) Corporate வருமான வரி: $293 பில்லியன் 
4) இறக்குமதி வரி (tariffs): $154 பில்லியன் 

தற்போது அரச கடனுக்கான வட்டி மிகப்பெரிய பளுவாக உள்ளது. இந்த பொருளாதார ஆண்டுக்கான வட்டி மட்டும் $1 டிரில்லியன் ஆக இருக்கும்.