ஆகஸ்ட் 6ம் திகதி அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது 50% இறக்குமதி வரியை அறிவித்த பின் விசனம் கொண்ட இந்தியா அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வதை இடைநிறுத்தி உள்ளது என்று Reuters செய்திகள் கூறுகின்றன.
அத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சரும் தனது அமெரிக்காவுக்கான பயணத்தை நிறுத்தி உள்ளார்.
Skryker வகை யுத்த வாகனங்கள், Javelin வகை ஏவுகணைகள், P8I வகை Boeing ஏவுபார்க்கும் இராணுவ விமானங்கள் என்பனவற்றின் கொள்வனவே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் ரம்ப் மனம் மாறி வரியை குறைத்தால் கொள்வனவு தொடரும் என்பதால் இடைநிறுத்த அறிவிப்பு பகிரங்கம் செய்யப்படவில்லை.
ரஷ்யா இந்தியாவுக்கு S-500 வகை நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணையை விற்பனை செய்ய முனைகிறது. இந்தியா S-500 ஏவுகணைகளை கொள்வனவு செய்ய விரும்பும். அனால் அமெரிக்கா அந்த கொள்வனவை விரும்பாது.