அமெரிக்க இராணுவத்தில் தொடர்ந்தால் 4-தின Video Game விடுப்பு 

அமெரிக்க இராணுவத்தில் தொடர்ந்தால் 4-தின Video Game விடுப்பு 

அமெரிக்க இராணுவத்தில் இணையும் ஆர்வம் அமெரிக்கர் மத்தியில் குறைந்து உள்ளதால் ஏற்கனவே சுயமாக விரும்பி இணைந்துள்ள (enlist) இராணுவ சேவையை நீடித்தால் Grand Theft Auto 5 என்ற Video Game விளையாட 4 தினங்கள் bonus விடுப்பு வழங்க அமெரிக்க இராணுவம் முன்வந்துள்ளது.

இந்த அறிவிப்பில் அமெரிக்க இராணுவம் Grand Theft Auto என்ற பதத்தை நேரடியாக பயன்படுத்தவில்லை என்றாலும் விடுப்பு காலம் Grand Theft Auto 5 விற்பனைக்கு வரும் நவம்பர் 19ம் திகதியை அண்டி உள்ளது. இராணுவமும் அந்த நோக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

Grand Theft Auto விளையாட்டு கொலைகள், வன்முறைகள், போலீஸ் மீதான தாக்குதல் போன்ற சட்டவிரோத செயல்கள் நிறைந்தது.

தற்போது enlist முறையில் இராணுவத்தில் இணைந்துள்ள படையினர் அவர்களின் enlist காலம் முடிய முன்னர் re-enlist செய்து கொண்டால் மட்டுமே மேற்படி 4-தின விடுப்பு கிடைக்கும்.