அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் யுத்தத்தில் அடையும் அழிவுகளும், இவை ஈரானில் ஏற்படுத்தும் அழிவுகளும் பகிரங்கத்துக்கு வருவது மேலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
இவ்வகை அழிவுகளை அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்து Planet Labs என்ற தனியார் நிறுவனம் தனது செய்மதிகள் மூலம் படம்பிடித்து செய்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருந்தது.
இதுவரை 4 தினங்களின் பின்னரே (delay) மேற்படி செய்மதி படங்களை Planet Labs பகிரங்கம் செய்திருந்தது. அமெரிக்க, இஸ்ரேல் வழங்கிய அழுத்தங்கள் காரணமாக அந்த இழுத்தடிப்பு காலம் (delay) திங்கள் முதல் 14 தினங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
யுத்த ஆரம்பத்தில் ஜோர்டான் நாட்டின் Muwaffaq Salti தளத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் விலை உயர்ந்த THAAD தடுப்பு ஏவுகணை battery களை ஈரான் தனது ஏவுகணை மூலம் தாக்கி அழித்திருந்தது. இந்த அழிவை Planet Labs தனது செய்மதி படம் மூலம் பகிரங்கம் செய்திருந்தது. அது அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஈரான் பாடசாலை ஒன்றில் 150 க்கும் மேற்பட்ட பாடசாலை சிறுமிகள் குண்டு வீச்சுக்கு பலியாகி இருந்தனர். அந்த குண்டை வீசியதும் அமெரிக்காவே என்பதை நிரூபிக்கவும் Planet Labs செய்மதி படங்கள் உதவின. இந்த அழிவுக்கு ஈரானின் ஏவுகணையே என்று ரம்ப் முதலில் பொய் கதை கூறியிருந்தார்.
