ரஷ்யாவின் எரிபொருளை காவும் கப்பல்களை (oil tanker) அமெரிக்கா கைப்பற்ற முனைவதை அறிந்த ரஷ்யா தனது நீர்மூழ்கி கப்பல் (submarine) உட்பட சில கடற்படை கப்பல்களை பாதுகாப்புக்கு அனுப்பி உள்ளது.
முன்னர் Bella 1 என்ற பெயருடன் கயானா கொடியுடன் ஈரானினதும் வெனிசுஏலாவினதும் எண்ணெய்யை காவிய கப்பலையே அமெரிக்கா கைப்பற்ற முனைந்தது. ஆனால் தற்போது அந்த கப்பல் Marinera என்ற பெயருடன், ரஷ்ய கொடியுடன் பிரித்தானியா அருகே நகர்கிறது.
மேற்படி எண்ணெய் கப்பல் முதலில் தெற்கு அத்திலாந்திக் கடலில் இருந்திருந்தாலும் செவ்வாய்க்கிழமை வடக்கு அத்திலாந்திக் கடலில், ஐஸ்லாந்து கரையில் இருந்து சுமார் 300 km தூரத்தில் நகர்கிறது.
கடந்த மாதம் கயானா நாட்டு கொடியுடன் பயணித்த Skipper என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றி இருந்தது.
Marinera என்ற மேற்படி கப்பலுடன் மேலும் 2 கப்பல்கள் ரஷ்ய கொடிக்கு மாற்றப்பட்டு நகர்கின்றன.
