அமெரிக்க சந்திர பயண அழைப்பை ரஷ்யா மறுத்தது

அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு Artemis என்று பெயர் இடப்பட்டு உள்ளது.
.
இந்த திட்டத்தில் இணைய கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், இஸ்ரேல், இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
.
அத்துடன் அமெரிக்கா ரஷ்யாவையும் இந்த திட்டத்தில் இணைக்க விரும்புகிறது. அதற்கான அழைப்பை NASA விடுத்து இருந்தாலும், ரஷ்யா இணையமறுத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரசியல் அணி சேர்ப்பு இது என்கிறது ரஷ்யா. ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு அதிகாரி Dmitry Rogozin புதிய Artemis திட்டத்தை ஒரு “political project” என்று கூறியுள்ளார்.
.
International Space Station (ISS) திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலும் அமெரிக்கா சீனா இணைவதை தடுத்து இருந்தது. ஆனால் ரஷ்யா அழைப்பை ஏற்று ISS திட்டத்தில் அங்கம் கொண்டது. சினம் கொண்ட சீனா தனது சொந்த Space Station அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது.
.
இம்முறை ரஷ்யா சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. சீனா சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறது.
.
Artemis திட்டத்துக்கு சுமார் $35 பில்லியன் செலவாகும். திட்டம் தடைகள் இன்றி செயல்பட்டால், 2024 ஆம் ஆண்டில் Artemis திட்ட விஞ்ஞானிகள் மீண்டும் சந்திரனில் காலடி வைப்பர்.
.