அமெரிக்க சனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ராமசுவாமி

அமெரிக்க சனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ராமசுவாமி

2024ம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்திய வம்சத்து விவேக் ராமசுவாமியும் (Vivek Ramaswamy) முன்வந்துள்ளார். இவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து அமெரிக்கா சென்ற பெற்றோருக்கு Ohio மாநிலத்து Cincinnati நகரில் பிறந்தவர்.

1985ம் ஆண்டு பிறந்த இவர் ஒரு Republican கட்சி ஆதரவாளர் என்றாலும் இவரை எவரும் இதுவரை அறிந்திருக்கவில்லை. இவர் சில மருத்துவ வர்த்தகங்களை ஆரம்பித்து செல்வந்தராகினார்.

அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன் Republican மற்றும் Democratic கட்சிகளுக்குள் போட்டி இடம்பெறும். இந்த போட்டிகளில் வெற்றி அடைவோர் சனாதிபதி தேர்வுக்கான பொது தேர்தலில் போட்டியிடுவார்.

Republican கட்சிக்குள் ஏற்கனவே ரம்பும் (Trump), சீக்கிய வம்சத்தை சார்ந்த நிக்கி ஹேலியும் (Nikki Haley) தாம் உட்கட்சி போட்டியில் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளனர். ராமசுவாமி 3ம் போட்டியாளர் ஆகிறார்.

தற்போது ரம்புக்கு சுமார் 40% ஆதரவும், ஹேலிக்கு 10% க்கும் குறைந்த ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது.

Ron DeSantis என்பவரும் போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. DeSantis கூறியபடி போட்டியில் இறங்கினால் அவரும், ரம்பும் முதல் இரண்டு இடங்களில் இருப்பார்.