அமெரிக்க சீக்கியர் மீதான வெறுப்பை உரமாக்கும் விபத்து 

அமெரிக்க சீக்கியர் மீதான வெறுப்பை உரமாக்கும் விபத்து 

அமெரிக்காவில் பொதுவாகவே பார வாகனம் (truck) செலுத்தும் சீக்கிய சாரதிகள் மீது வெறுப்பு உள்ளது. அண்மையில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து சீக்கிய சாரதிகள் மீதான அந்த வெறுப்பை உரமாக்கி உள்ளது.

ஆகஸ்ட் 12ம் திகதி Harjinder Singh என்ற Democratic கட்சி ஆளும் கலிபோர்னியா மாநில சீக்கிய truck சாரதி Republican கட்சி ஆளும் புளோரிடா மாநிலத்தில் U-turn ஒன்றை செய்யும்போது ஏற்பட்ட விபத்துக்கு 3 பேர் பலியாகினர். இந்த விபத்து மேற்படி இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் அரசியல் போரை ஆரம்பித்து உள்ளது.

மேற்படி சாரதி 2018ம் ஆண்டு மெக்சிக்கோ மூலம் சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர் என்றும், ஆங்கிலம் தெரியாதவர் என்றும் புளோரிடா அரசு சாடியுள்ளது. இவருக்கு காலிபோர்னியா மாநிலம் பார வாகன சாரதி உரிமை வழங்கியது தவறு என்கிறது புளோரிடா. இந்த சாரதியை ஒரு thug என்றும் புளோரிடா அழைத்துள்ளது.

ஆனால் இவர் வேலைவாய்ப்பு விசாவில் வந்தவர் என்கிறது கலிபோர்னியா.

இந்த விபத்து அமெரிக்க சீக்கிய சாராதிகளை மேலும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.

மேற்படி விபத்து விசாரணைகள் தொடர்கின்றன. Harjinder மீது manslaughter மற்றும் vehicular homicide வழக்குகள் புளோரிடாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 750,000 சீக்கியர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 250,000 trucking தொழில்களை செய்வதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலானோர் காலிபோர்னியாவில் வாழ்கின்றனர்.