அமெரிக்க தடையிலிருந்த ஜெனரல் சீன பாதுகாப்பு அமைச்சராகிறார்

அமெரிக்க தடையிலிருந்த ஜெனரல் சீன பாதுகாப்பு அமைச்சராகிறார்

அமெரிக்கா தடை செய்திருந்த சீனாவின் முன்னாள் ஜெனரல் Li Shangfu இன்று சீனாவில் பாதுகாப்பு அமைச்சர் ஆகியுள்ளார். Li பாதுகாப்பு அமைச்சர் ஆவது அமெரிக்காவுக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

இந்திய பிரதமர் மோதி மீதான தடையை, அவர் பிரதமர் ஆகிய பின், நீக்கியது போல் Li Shangfu மீதான தடையை அமெரிக்கா நீக்கி அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது தொடர்பு கொள்ளாது இருத்தல் வேண்டும். தொடர்பு கொள்ளாது இருப்பது கடின விசயம்.

Li Shangfu ரஷ்யாவிடம் இருந்து Su-35 வகை யுத்த விமானங்களையும், S-400 வகை ஏவுகணைகளையும் கொள்வனவு செய்தார் என்று குற்றம் சாட்டியே முன்னாள் சனாதிபதி ரம்ப் அக்கால சீன ஜெனரல் Li மீது தடையை விதித்து இருந்தார். அந்த தடை பைடென் காலத்திலும் தொடர்ந்தது.

Li சீன படைகளின் ஜெனரலாக இருந்த காலத்தில் சீன இராணுவத்தின் தரம் மிக வேகமாக உயர்ந்து இருந்தது. அக்காலத்திலேயே சீனா தனது செய்மதி ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழித்து இருந்தது. தேவைப்பட்டால் எந்த நாட்டின் ஏவுகணையையும் தம்மால் அழிக்க முடியும் என்பதே சீனா வெளியிட்ட செய்தி.

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin உட்பட மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் சீனாவுடன் தொடர்பு கொள்வதானால் Li உடனேயே தொடர்பு கொள்வது வளமை.

65 வயதான Li ஒரு aerospace பொறியியலாளர்.