அமெரிக்க தரையிறங்கும் படைகள் ஈரான் நோக்கி விரைவு 

அமெரிக்க தரையிறங்கும் படைகள் ஈரான் நோக்கி விரைவு 

அமெரிக்காவின் Marines என்ற தரையிறங்கும் விசேட படையினர் ஈரானை நோக்கி விரைவதாக கூறப்படுகிறது. 

ஜப்பானில் நிலை கொண்டிருந்த USS Tripoli என்ற தரை இறங்கும் வசதி கொண்ட amphibious யுத்த கப்பலே ஈரான் நோக்கி விரைகிறது. மார்ச் 11ம் திகதி ஜப்பானின் Okinawa தளத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் இன்று செவ்வாய் மார்ச் 17 சிங்கப்பூர் அருகே பயணிப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 850 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் 2,200 படையினர் உள்ளனர். அத்துடன் F35 யுத்த விமானங்களும், MV 22 Osprey விமானங்களும் இதில் உள்ளன.

வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தரை இறங்கி அடைந்த துன்பங்களை ஈரானிலும் அடைய விரும்பாத ரம்ப் அரசு ஈரானில் தரையிறங்கும் திட்டத்தை முதலில் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிர்பாராத ஈரானின் எதிர் தாக்குதல்கள் அமெரிக்க படைகளை மெல்ல உள்ளே இழுக்கின்றன.