அமெரிக்க பங்குச்சந்தை சட்டங்களை கண்காணிக்கும் Securities and Exchange Commission (SEC) இந்திய கௌதம் அதானி மீதும், அவரின் உறவினரான சாகர் அதானி மீதும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணையை ஆரம்பித்து உள்ளது. ஆனால் அவர்களுக்கான SECகின் அழைப்பாணைகளை இந்திய மோதி அரசு ஏற்க மறுக்கிறது.
அதனால் SEC அழைப்பாணைகளை நேரடியாக email மூலம் இருவருக்கும் அனுப்ப நியூ யார்க் நீதிமன்றை கேட்டுள்ளது. அதனால் அதானி உரிமை கொண்ட 10 நிறுவனங்களும் பங்குச்சந்தை பெறுமதியில் மொத்தம் $12.5 பில்லியனை ஒரே நாளில் இழந்துள்ளன.
அதானி நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு $265 மில்லியன் மில்லியன் இலஞ்சம் வழங்கி அதானி உற்பத்தி செய்யும் மிசாரத்தை விற்பனை செய்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இந்த நிறுவன பங்குகளில் அமெரிக்கர் முதலீடு செய்வதால் Hague Convention விதிப்படி SECக்கு இவற்றை விசாரணை செய்ய உரிமை உண்டு.
