அமெரிக்க பங்கு சந்தை வியாழன் $2.5 டிரில்லியன் இழப்பில்

அமெரிக்க பங்கு சந்தை வியாழன் $2.5 டிரில்லியன் இழப்பில்

அமெரிக்க பங்கு சந்தை வியாழன் சுமார் $2.5 டிரில்லியன் ($2,500 பில்லியன்) பெறுமதியை இழந்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் Democratic கட்சியின் கைகளுக்கு வந்ததால் AI முதலீடுகளுக்கு கட்டுப்பாடு வரலாம் என்ற பயம் பங்கு சந்தைக்கு வந்துள்ளது.

பங்கு சந்தை பெறுமதி வங்கியில் இருக்கும் பணத்தின் பெறுமதி போலதல்ல. பங்கு சந்தை பெறுமதி திடீரென அதிகரிக்கும், பின் திடீரென வீழ்ச்சி அடையும். ஆனால் $2.5 டிரில்லியன் தளம்பல் பங்கு சந்தைக்கு நல்லதல்ல.

அமெரிக்க Dow பங்கு சந்தை சுட்டி புதன்கிழமை, தேர்தலின் மறுநாள், 1,569 புள்ளிகளால் அதிகரித்து பின் வியாழன் 1,833 புள்ளிகளால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tesla, SpaceX CEO இலான் மஸ்க் இதுவரை Republican கட்சி பலத்தில் இருந்த Texas மாநிலத்துக்கு தனது நிறுவனங்களை Democratic கட்சி பலம் கொண்ட கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து நகர்த்தி இருந்தார். ஆனால் இம்முறை Texas மாநிலத்தில் ஆளுநர் பதவியையும், Senator பதவியையும் Democratic கட்சி கைப்பற்றி உள்ளது. 

இலான் மஸ்க் செவ்வாய் தேர்தலில் Republican கட்சிக்கு ஆதரவு தேடி சுமார் $500 மில்லியன் சொந்த பணத்தை செலவு செய்திருந்தார். இவரின் Tesla நிறுவன பங்கு ஒன்றின் விலை வியாழன் 11% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. SpaceX பங்கு 9% பெறுமதியை இழந்துள்ளது.

Nvidia பங்கு 9.3% பெறுமதியை இழந்துள்ளது. இவ்வாறே பல AI நிறுவனங்கள் தமது பங்கு சந்தை பெறுமதிகளை இழந்துள்ளன.