அமெரிக்க பணவீக்கம் 3.7% ஆக உயர்வு 

அமெரிக்க பணவீக்கம் 3.7% ஆக உயர்வு 

அமெரிக்காவின் செப்டம்பர் மாத பணவீக்கம் (Consumer Price Index அல்லது CPI) 3.7% ஆக உயர்ந்துள்ளது என்று புதன்கிழமை வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. ஆகஸ்ட் மாதம் அங்கு பணவீக்கம் 3.4% ஆக இருந்தது.

ஈரான் யுத்தம் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பதே பணவீக்கம் அதிகரிக்க பிரதான காரணம் ஆக உள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை 9.1% ஆல் அதிகரித்து உள்ளது.

பணவீக்கம் அதிகரித்ததால் அங்கு மத்திய வங்கியின் வட்டியும் அதிகரிக்கப்படலாம்.

நவம்பர் 3ம் திகதி அமெரிக்காவில் mid term தேர்தல் இடம்பெற உள்ளதால் CPI அதிகரிப்பும், வட்டி அதிகரிப்பும் ரம்புக்கும் அவரின் Republican கட்சிக்கும் மேலும் ஒரு பாதகமாக அமையும்.