அமெரிக்காவின் National Security Agency (NSA) பயன்படுத்தும் இரகசிய, highly classified தொலைத்தொடர்பு வலையமைப்பு அறியப்படாத காரணம் ஒன்றால் செயலிழந்து முடக்கப்பட்டு உள்ளது.
NSANet என்ற இந்த வலையமைப்பு மூலமே அமெரிக்க NSA பணியாளர்கள் தம்முள் தொடர்பு கொள்வர். இதன் மூலமே classified தகவல்கள் பரிமாறப்படும்.
NSANet செயல் இழப்புக்கு இதுவரை காரணம் அறியப்படாவிட்டாலும் இணையம் மூலமான cyber attack காரணம் அல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அண்மையில் PHP என்ற software மொழியில் அறியப்பட்ட பாரிய குறைபாட்டுக்கு திருத்தும் (fix update) செய்யும்போதே வலையமைப்பு முடங்கியதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
