அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க சீனா மறுப்பு

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க சீனா மறுப்பு

Li Shangfu என்ற சீனாவின் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் Lloyd Austin வேண்டுகோள் விடுத்ததாகவும் அதை சீனா மறுத்து உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இன்று தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் இந்த கிழமை இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமர்வு (annual security forum) ஒன்றுக்கு வரும் சீன பாதுகாப்பு அமைச்சரையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சந்திக்க விரும்பி இருந்தார்.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Li Shangfu 2018ம் ஆண்டு அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ஆயுதங்களை கொள்வனவு செய்தார் என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டு. அமெரிக்கா Li யை தடை செய்த பின்னரே சீனா அவரை பாதுகாப்பு அமைச்சர் ஆகியது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஏனைய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் சந்தித்து உரையாடுவார்.