அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரி அதிகரிப்பு

US_China

அமெரிக்கா கடந்த வெள்ளி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியை (tariff) அறவிட தீர்மானம் எடுத்து இருந்தது. சீனாவும் பதிலுக்கு $60 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் 10% முதல் 25% வரையான அதிகரித்த இறக்குமதி வரியை அறவிட உள்ளதாக இன்று கூறியுள்ளது.
.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்தும் உக்கிரம் அடைவதால் இன்று உலக பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை அடைந்திருந்தன. அமெரிக்காவின் DOW index இன்று சுமார் 600 புள்ளிகளால் (2.38%) வீழ்ந்திருந்தது. இன்று மதியம் அளவில் DOW index வீழ்ச்சி சுமார் 700 புள்ளிகளாக இருந்தது.
.
சீனாவின் இன்றைய அறிவிப்புக்கு பின் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரி அறவிட திட்டம் தீட்டுவதாகவும் கூறப்படுகிறது.

.