அமெரிக்க யுத்த விமானத்தை ஈரான் சீன ஏவுகணையால் விழுத்தியது?

அமெரிக்க யுத்த விமானத்தை ஈரான் சீன ஏவுகணையால் விழுத்தியது?

கடந்த மாதம் ஈரானுக்கு மேலால் பறந்த இரண்டு F-15 வகை நவீன வகை யுத்த விமானங்களில் ஒன்றை ஈரான் சுட்டு விழுத்தி இருந்தது. இதன் விமானி உடனே அமெரிக்காவால் காப்பாற்றப்பட, அதில் பயணித்த ஆயுத இயக்குனர் $500 மில்லியனுக்கும் அதிக செலவில் இரண்டாம் தினம் காப்பாற்றப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த நவீன யுத்த விமானத்தை எப்படி ஈரான் தாக்கி அழித்தது என்பதை அறிய பல முனைகளில் ஆராயப்பட்டன. அமெரிக்காவின் NBC செய்தி நிறுவன ஆய்வின்படி ஈரானுக்கு சீனா வழங்கிய தோளில் வைத்து சுடும் ஏவுகணையே F-15 ஐ சுட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உண்மையில் இந்த இரகசியத்தை அமெரிக்க அரசே NBC செய்தி நிறுவனத்துக்கு கசிய விட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த கசிவு மூலம் சீனா ஈரானுக்கு உதவுகிறது என்பதை காட்ட அமெரிக்கா முனைந்திருக்கும்.

MANPADS (MAN-Portable Air Defense System) என்றழைக்கப்படும் இந்த ஏவுகணை 7 அடி நீளமும், 40 இறத்தல் எடையும் கொண்டது. இதன் விலையும் மலிவு.

அத்துடன் சீனா YLC-8B வகை ரேடார் கட்டமைப்பையும் ஈரானுக்கு வழங்கி இருக்கலாம் என்றும் NBC கூறியுள்ளது.