அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா சீனா விரைவு

அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா சீனா விரைவு

அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஜீனா (Gina Raimondo) சீனாவுக்கு விரைந்துள்ளார். நேற்று ஞாயிறு மாலை சீனா சென்ற இவரின் நோக்கம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தையும், உல்லாச பயணத்தையும் அதிகரிப்பதே.

தனது பேச்சுக்களில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகமான எதையும் பேச்சில் எடுக்கப்போவது இல்லை என்றும், அதேவேளை சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதும் இல்லை என்றும் கூறியுள்ளார் ஜீனா.

தனது பயணத்துக்கு முன் ஜீனா சனாதிபதி பைடென் உடனும், 100கும் மேற்பட்ட அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடனும் உரையாடியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல் தடவை.

2019ம் ஆண்டுக்கு சீன உல்லாச பயணிகள் அமெரிக்காவுக்கு சுமார் $30 பில்லியன் பெறுமதியான வர்த்தகத்தை வழங்கியதாகவும், அது அமெரிக்காவில் 50,000 வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது சீனர்களின் அமெரிக்க பயணம் முடக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் Boeing 737 Max விமானங்கள் சீனா செல்வதும் 4 ஆண்டுகளாக முடங்கி உள்ளது. அதையும் ஜீனா கையாள முனைவார்.