அமெரிக்க விமானப்படை இரகசிய இணையத்திலும் திருட்டு

அமெரிக்க விமானப்படை இரகசிய இணையத்திலும் திருட்டு

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான Cloud One என்ற cloud computing இரகசிய இணைய வலையமைப்பும் hackers களால் தாக்கி அதில் இருந்த இரகசியங்கள் திருடப்பட்டு உள்ளன.

Cloud One வலையமைப்பை நவீனப்படுத்தும் பணிகளை செய்ய முயன்ற வேளையிலேயே இந்த வலையமைப்பை hackers தாக்கி இரகசியங்களை திருடி இருந்ததை அமெரிக்கா அறிந்துள்ளது.

மேலும் பல அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு சொந்தமான இணைய வலையமைப்புகள் ஏற்கனவே hackers களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தன. ஈரான், ரஷ்ய, சீன, வட கொரிய hackers களே இவற்றை செய்திருக்கலாம் என்று அமெரிக்கா நம்புகிறது.

2017ம் ஆண்டு அமெரிக்க விமான படையின் அனைத்து இணையம் மூலமான பணிகளுக்கும் வசதியாகவே Cloud One உருவாக்கப்பட்டது. விமானப்படையின் Command and Control பணிகளும் Cloud One மூலமே செய்யப்படுகிறது.