அமெரிக்க விமானம்தாங்கிக்கு சீனா துறைமுக அனுமதி மறுப்பு

USSStennis

அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான USS Stennisக்கும் அதற்கு பாதுபாப்பு வழங்கும் மேலும் 4 அமெரிக்க கடல்படை கப்பல்களுக்கும் Hong Kong துறைமுகம் செல்லும் அனுமதியை சீனா மறுத்துள்ளது. மே மாதம் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்த துறைமுகத்தில் தங்க அமெரிக்கா அனுமதி கேட்டிருந்தது. ஆனால் சீனா மறுத்துவிட்டது.
.
இந்த விமானம்தாங்கி கப்பல் இதற்கு முன்னர் தென்சீன கடலூடு சென்றிருந்தது. குறிப்பாக சீனா உரிமை கொள்ளும் புதிய தென்சீன பகுதிகளினூடு சீனாவின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் முறையில் இந்த தாங்கி சென்றிருந்தது.
.
அதுமட்டுமன்றி இரண்டு கிழமைகளின் முன் இந்த தாங்கி தென்சீன கடலில் இருந்தபோது அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Ashton Carterரும், பிலிப்பீன்ஸ் பாதுகாப்பு செயலாளரும் Osprey விமானம் மூலம் இந்த தாங்கியில் இறங்கி இருந்தனர்.
.
அதேவேளை அமெரிக்காவின் இன்னோர் யுத்தக்கப்பலான USS Blue Ridge தற்போது Hong Kong துறைமுகத்தில் உள்ளது. அதற்கு எந்தவித தடையும் இல்லை.
.

இதற்கு முன்னர், 2007 ஆம் ஆண்டிலும் அமெரிக்க யுத்த கப்பல் ஒன்றுக்கு Kong Hong துறைமுகம் செல்லும் அனுமதி மறுக்கபட்டு இருந்தது.
.